மணிப்பூரில் மீண்டும் கலவரம்.. நாடெங்கும் பரபரப்பு.. விரையும் இந்திய ராணுவம்..!! - Seithipunal
Seithipunal


வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் 53 சதவீதம் மெய்டீஷ் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க வேண்டும் என மணிப்பூர் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதற்கு எதிராக பழங்குடி மாணவர்கள் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 3ம் தேதி மணிப்பூர் அனைத்து பழங்குடி மாணவர் அமைப்பின் சார்பில் மலைப்பகுதிகளில் உள்ள 7 மாவட்டங்களில் ஒற்றுமை பேரணி நடத்தினர்.

அப்போது அவர்களுக்கும் மெய்டீஸ் இனத்தவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறி கலவரமாக மாறியது. இந்த வன்முறையில் வீடுகள், வாகனங்கள், கடைகள், வழிபாடு தளங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. இதனை அடுத்து ராணுவத்தினர் விரைந்து கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் வன்முறை வெடித்ததால் ராணுவ மற்றும் துணை ராணுவ படையினர் மணிப்பூர் மாநிலத்திற்கு விரைந்துள்ளனர்.

மணிப்பூர் மாநில தலைநகரான இம்பாலின் உள்ளூர் சந்தையில் இடம் தொடர்பாக இரு சமூகங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் தீ வைப்பு சம்பவங்களும் அரங்கேறியுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த ஊரடங்கு உத்தரவானது மாலை 4 மணிக்கு மேல் தளர்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மீண்டும் அங்கு வன்முறை வெடித்ததால் பல வீடுகளும், வழிபாட்டுத் தலங்களும், கடைகளும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக ராணுவ மற்றும் துணை ராணுவ படையினர் மணிப்பூர் மாநிலத்திற்கு விரைந்துள்ளனர். இதனால் மணிப்பூர் மாநிலத்தில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Riots again again in Manipur


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->