உச்சகட்ட பதற்றத்தில் ஈரான், ஈராக்..! இந்திய விமானகளுக்கு தடை விதித்த மத்திய அரசு..!  - Seithipunal
Seithipunal


மெரிக்கா ஈரான் இடையே அணு ஆயுத தவிர்ப்பு விவகாரம், யூரேனியம் செறிவூட்டல், பொருளாதார தடைகள் போன்ற பல விவகாரங்கள் காரணமாக அமெரிக்கா ஈரான் இடையே பிரச்சினைகள் ஏராளம். இதனால் இரு நாடுகளிடையே அசாதாரண சூழல் நிலவி வருகிறது. 

இதற்கிடையே கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 3ம் தேதி) அமெரிக்கா ராணுவம் நடத்திய வான்வழித்தாக்குதலில் ஈரானின் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இத தாக்குதலானது தொடரும் என்றும் மேலும் ஈரானில் உள்ள 52 முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்துவோம் என அமெரிக்கா சவால் விடுத்தது. 

அதேபோல அமெரிக்காவின் செயல்களுக்கு பழி தீர்ப்போம் என ஈரானும் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது ஈரான் 12க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

Image result for trump seithipunal

‘ஈராக்கின் அல்-ஆசாத் மற்றும் இர்பில் பகுதிகளில் உள்ள அமெரிக்க விமானப்படைமுகாம்கள் மற்றும் அதன் கூட்டணி படைகள் மீது ஈரான் 12க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளது. நேற்று மாலை 5.30 மணியளவில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலால் ராணுவ தளங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என பென்டகன் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், ஈராக்கில் உள்ள அமெரிக்கா ராணுவத்தளங்களை குறிவைத்து ஈரான் நடத்திய தாக்குதலில் 80 பேர் உயிரிழந்தனர். ஈராக்கிலுள்ள அயின் அஸாத் விமானத்தளம், அப்ரில் எனும் பகுதிகளிள் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 80 பேர் உயிரிழப்பு என ஈரானின் பிரஸ் டிவியில் செய்தி வெளியாகியுள்ளது. மேலும், ஈரான் ஏவுகணைகளை ஈராக்கில் வீசி தாக்குதல் நடத்தும் வீடியோ காட்சிகளையும் பிரஸ் டிவி வெளியிட்டுள்ளது. 

அதேபோல ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் தாக்கப்பட்டதை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த தாக்குதலில் ஏற்பட்டுள்ள உயிரிழைப்புகள் மற்றும் சேதங்கள் மதிப்பிடப்படுவதாகவும், ஈராக்கில் அமெரிக்கப் படைகள் மீது நடத்திய தாக்குதல் குறித்து அறிக்கையை வெளியிட உள்ளதாக டொனால்டு டிரம்ப் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஈரானில் இருந்து புறப்பட்ட உக்ரைன்  நாட்டின் விமானம் விழுந்து நொறுங்கி 170 பேர் உயிரிழந்தனர். மேலும் போர் பதற்றம் தொடர்ந்து நீடிப்பதால் இந்திய விமானங்கள் ஈரான், ஈராக் வான் பகுதிக்குள் செல்ல வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

restriction for indian airplane to fly on iran


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->