இரண்டு வருடங்களாக தொடர் பாலியல் வன்கொடுமை..!! இளம்பெண்ணின் அதிர்ச்சி தரும் வாக்குமூலம்..!! - Seithipunal
Seithipunal


பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டியதால் இளம்பெண் தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேசத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கங்கையில் குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுப்படுள்ளார். அவரை மீட்ட காவல்துறை அவரிடம் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

அந்த பெண் கூறிய காரணம் காவல்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அந்த பெண்ணின் மாமா கடந்த 2019 ஆண்டு கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக அவரின் குடும்பத்துடன் அலகபாத் வந்துள்ளார்.

இதனை அடுத்து, அந்த பெண்ணை அங்குள்ள ஹோட்டலுக்கு அழைத்து சென்று அவருக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அந்த பெண் கண்விழித்து பார்த்த போது அதிர்ச்சியடைந்துள்ளார்.

அப்போது அந்த பெண்ணிடம் நடந்ததை வெளியில் சொன்னால் பாலியல் வன்கொடுமை செய்த வீடியோவை வெளியிட்டு விடுவேன் எனவும் கூறியுள்ளார். இதனால் அவர் வெளியில் சொல்லாமல் இருந்துள்ளார்.

இதனை காரணமாக வைத்து அந்த பெண்ணை மாமாவும், அவரது மகனும் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் அவர் கர்பமடைந்த நிலையில் அதனை கலைத்தும் உள்ளனர்.

அவர்களின் பிடியில் இருந்து தப்பி தற்கொலை செய்து கொள்ள முடிவேடுத்ததாக  அந்த பெண் தெரிவித்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Relatives who sexually assaulted the teenager


கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?Advertisement

கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?
Seithipunal