சபரிமலையில் தரிசிக்கும் பக்தர்களின் எண்ணிக்கை குறைப்பு - தேவஸ்தானம் போர்டு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


கார்த்திகை மாதம் தொடங்கிவிட்ட நிலையில் பலரும் ஐயப்ப சுவாமிக்கு மாலை அணிந்து விரதமிருந்து மலைக்குச் சென்று வருகின்றனர். இதில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16-ந் தேதி முதல் நடை திறக்கப்பட்டது. 

கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் இந்த ஆண்டு மிக பிரம்மாண்டமாக நடைபெறுவதால் பக்தர்கள் கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. பக்தர்கள் தரிசனத்திற்காக ஆன்லைன் முன்பதிவு, உடனடி முன்பதிவு போன்றவற்றின் மூலம் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் சரியான நேரத்திற்கு வந்தால் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.  இருப்பினும், கூட்டம் அதிகமாக இருப்பதால் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்யும் சூழ்நிலை தான் நிலவி வருகிறது.

 இதனால், பக்தர்களின் வசதிக்காக கோவில் நடை திறப்பு நேரத்திலும் தேவஸ்தானம் மாற்றம் செய்துள்ளது. அதாவது, வழக்கமாக அதிகாலை  மணிக்கு திறக்கப்பட்டு வந்த நடை, தற்போது 3 மணிக்கே திறக்கப்படுகிறது. அதேபோல் மாலையிலும் நடை மாற்றப்பட்டுள்ளது.

மேலும், வழக்கமான நாட்களை விட சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சபரிமலைக்கு பக்தர்களின் வருகை அதிகமாக உள்ளது. இதற்காக ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் 13 இடங்களில் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சபரிமலையில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் இனி ஒரு நாளைக்கு 90,00 பக்தர்கள் மட்டுமே ஆன்லைனில் முன்பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் போர்டு தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு வரை ஒரு நாளுக்கு 1.20 லட்சம் பேர் வரை முன்பதிவு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Reduction in the number devotees at Sabarimala temple


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->