ரெப்போ வட்டி விகிதம் 0.5% உயர்வு - ரிசர்வ் வங்கி அறிவிப்பு - Seithipunal
Seithipunal


வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.5 சதவீதம் உயர்த்தி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் இன்று அறிவித்துள்ளார். இதன்படி ரெப்போ வட்டி விகிதம் 5.4% இருந்து 5.9% மாக உயர்ந்துள்ளது. 

மேலும் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுனர் சக்தி காந்ததாஸ், உலக அளவிலான அரசியல் சூழல், நிதிச் சந்தையில் உள்ள நிச்சயமற்ற தன்மையால் பணவீக்கம் அதிகரித்துள்ளதால் நாட்டின் பணவீணக்கம் தற்போது 7% ஆக உள்ளது என்றார்.

மேலும் நடப்பாண்டின் இரண்டாம் பாதியில் அது 6% இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், தனியார் நுகர்வு அதிகரித்து வருவதாகவும், கிராமப்புற தேவையும் படிப்படியாக அதிகரித்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

இந்த ரெப்போ வட்டி விகிதம் உயர்வால் வங்கி தனிநபர் கடன், வாகன கடன் உள்ளிட்டவற்றின் வட்டி விகிதம் மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RBI announced hike in repo interest rate


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->