பால்தாக்கரே வீட்டிற்கு சென்ற ராஜ்தாக்கரே..13 வருடங்களுக்குப்பின் சந்திப்பு! - Seithipunal
Seithipunal


மும்பையில் 65வது பிறந்த நாளை முன்னிட்டு உத்தவ் தாக்கரேவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்  ராஜ் தாக்கரே,13 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மாதோஸ்ரீ’யில் வருகை புரிந்ததால் தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். 

அரசியலில் முக்கியமான தருணமாகக் கருதப்படும் நிகழ்வாக, மூத்த சகோதரர் உத்தவ் தாக்கரே பிறந்த நாளையொட்டி, ராஜ் தாக்கரே நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இது 13 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மாதோஸ்ரீ’யில் அவர் வந்ததைக் குறிப்பதாகும்.

2005ல் கருத்து வேறுபாடுகள் காரணமாக, சிவசேனாவிலிருந்து ராஜ் தாக்கரே விலகி நவநிர்மாண் சேனாவை தொடங்கினார்.அப்போது ‘மாதோஸ்ரீ’யிடம் “மரியாதை கேட்டேன்; ஆனால் அவமானம் தான் கிடைத்தது” என்று அவர் கூறியிருந்தது.

இந்தநிலையில் அரசியலில் எதிரும், புதிருமாக இருந்த உத்தவ் தாக்கரே, ராஜ்தாக்கரே சகோதரர்கள் கடந்த 5-ந் தேதி மும்பையில் நடந்த இந்தி திணிப்புக்கு எதிராக நடைபெற்ற கூட்டத்தில், உத்தவ்-ராஜ் தாக்கரே சகோதரர்கள் ஒன்றாகக் கலந்து கொண்டது அரசியல் அச்சுறுத்தலை உருவாக்கியது.

அதனை தொடர்ந்து 65வது பிறந்த நாளையொட்டி, ராஜ் தாக்கரே, ‘மாதோஸ்ரீ’யில் 20 நிமிடங்கள் தங்கியபோது, பூங்கொத்து வழங்கி அன்புடன் வாழ்த்தினார்அவருடன் கட்சியின் மூத்த தலைவர் பாலநந்த்காவ்கர் உடன் வந்திருந்தார்

இதையடுத்து ராஜ் தாக்கரே, தனது ‘X’ பக்கத்தில், “மூத்த சகோதரர் உத்தவ் தாக்கரேக்கு மாதோஸ்ரீயில் வாழ்த்து தெரிவித்தேன்” என பதிவிட்டார்,உத்தவ் தாக்கரேவும் சந்திப்பில் மகிழ்ச்சி தெரிவித்தார்.இச்சந்திப்பு, தாக்கரே சகோதரர்கள் மீண்டும் இணையும் வாய்ப்பை உறுதி செய்கிறது என்ற எதிர்பார்ப்பை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Raj Thackeray who went to the house of Bal Thackeray Meeting after 13 years


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->