சற்றுமுன்: அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவிகிதம் உள்ஓதுக்கீடு! புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10% இடஒதுக்கீடு வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க, தமிழக அரசு கடந்த மாதம் சட்டமன்ற கூட்டத்தொடரில் சட்ட மசோதா கொண்டு வந்து நிறைவேற்றி, ஆளுநர் ஒப்புதலுக்காக காத்துக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு பத்து சதவீத உள்ஒதுக்கீடு வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி அமைச்சரவை எடுத்துள்ள இந்த முடிவுக்கு, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதலுக்காக அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PUTHUCHERY CM announce for govt school medical reservation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->