பூஞ்ச் தீவிரவாத தாக்குதல்: உயிரிழந்த வீரர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம்.! பஞ்சாப் முதல்வர் - Seithipunal
Seithipunal


கடந்த வியாழக்கிழமை காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் ராணுவ வாகனம் மீது துப்பாக்கியால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் மற்றும் ஒடிசாவை சேர்ந்த ஒருவர் என ஐந்து ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உயிரிழந்த பஞ்சாப்பை சேர்ந்த 4 ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், தல 1 கோடி நிவாரணமும், அரசு வேலையும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் அவர்களின் தியாகம் சக வீரர்களிடையே மிகவும் பக்தியுடனும், அர்ப்பணிப்புடனும் செயல்பட தூண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், உயிரிழந்த ராணுவ வீரர்களில் ஒருவரான ஒடிசாவை சேர்ந்த லான்ஸ் நாயக் தேபாஷிஷ் பஸ்வாலின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Punjab cm Relief of Rs 1 crore to the families of soldiers Poonch terrorist attack


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->