சிங்கப்பூர் செயற்கைக்கோளுடன்... 22-ஆம் தேதி விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட்..! - Seithipunal
Seithipunal


சிங்கப்பூரின் டெலியோஸ்-2 செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட் வருகின்ற 22ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), நாட்டுக்குத் தேவையான தகவல் தொடர்பு, காலநிலை மாற்றம், தொலையுணர்வு மற்றும் வழிகாட்டு செயற்கைக்கோள்களை, பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட்கள் மூலம் விண்ணில் நிலை நிறுத்திவருகிறது. மேலும், அதனுடன் வணிகரீதியாக வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்துகிறது.

இந்நிலையில், சிங்கப்பூர் நாட்டுக்கு சொந்தமான டெலியோஸ்-2 எனும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கு இஸ்ரோவின் என்.எஸ்.ஐ.எல் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த டெலியோஸ்-2 செயற்கைக்கோளானது புவி ஆய்வு, இயற்கை பேரிடர் கண்காணிப்பு உட்பட பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது.

இதன்படி, டெலியோஸ்-2 செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட் மூலம் வருகின்ற 22ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான இறுதி கட்டப் பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PSLV C 55 rocket launched on 22nd with Singapore satellite


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->