குடியரசு தலைவர் தேர்தல்.. இன்று முதல் வேட்பு மனு தாக்கல்.!! - Seithipunal
Seithipunal


குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி காலம் அடுத்த மாதம் 24-ஆம் தேதி முடிவடைகிறது. புதிய குடியரசுத் தலைவர் ஜூலை 25ஆம் தேதி பதவி ஏற்கவேண்டும், அதற்குள் புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்ய வேண்டும், இதற்காக தேர்தல் அடுத்த மாதம் 18-ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில், இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. இந்த தேர்தலுக்கு மத்தியில் ஆளும் பாஜக கூட்டணியும், எதிர்க்கட்சி கூட்டணியும் வேட்பாளர்களை இன்னும் முடிவு செய்யவில்லை. இது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

குடியரசு தலைவர் தேர்தலை நடத்தும் அதிகாரியாக மாநிலங்களவை செயலாளர் பிசி மோடி நியமிக்கப்பட்டுள்ளார். சிறப்பு பணி அதிகாரி முகுல் பாண்டே, இணை செயலாளர் சுரேந்திர குமார் திரிபாதி ஆகியோர் தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். குடியரசு தலைவர் தேர்தலுக்காக மாநிலங்கவையில் தனிப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. குடியரசு தலைவர் தேர்தலில் 4809 எம்பிக்கள், எம்எல்ஏக்கள் ஓட்டு போட உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Presidential Election Nomination Today Start


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->