பாகிஸ்தானை போரில் வீழ்த்திய வெற்றி தினம் - ராணுவ வீரர்களுக்கு ஜனாதிபதி முர்மு அஞ்சலி.! - Seithipunal
Seithipunal


இந்தியா, பாகிஸ்தான் இடையே 1971-ஆம் ஆண்டு நடந்த போரில் இந்தியாவின் வெற்றியின் அடையாளமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 16-ந் தேதி 'விஜய் திவஸ்' (வெற்றி தினம்) கொண்டாடப்படுகிறது. மேலும் இந்தப் போர் வங்கதேசம் என்ற தனி நாடு உருவாக காரணமாக இருந்தது.

இன்றுடன் இந்தியா பாகிஸ்தானை போரில் வீழ்த்தி 51 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இந்நாளில், ராணுவ வீரர்களின் தியாகங்கள் நினைவுகூரப்பட்டு, அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. இந்நிலையில் பாகிஸ்தானை போரில் வீழ்த்திய வெற்றி தினநாளில், இந்திய ராணுவ வீரர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அஞ்சலி செலுத்தினார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 1971ஆம் ஆண்டு போரின் போது நமது ஆயுத படையினர் வெளிப்படுத்திய வீரத்தை நன்றியுடன் நினைவு கூறுகிறோம் என்றும், வீரர்களின் இணையற்ற துணிச்சல் மற்றும் தேசத்துக்காக அவர்கள் செய்த தியாகத்தின் கதைகள் ஒவ்வொரு இந்தியருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

President Murmu Tributes to Soldiers on Victory Day for Defeating Pakistan in War


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->