குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உடன் நெதர்லாந்து ராணி சந்திப்பு.! - Seithipunal
Seithipunal


ஜனாதிபதி திரவுபதி முர்வை நெதர்லாந்தின் ராணி மாக்சிமா இன்று சந்தித்து பேசினார். 

குடியரசு தலைவர் திரௌபதி முர்வை நெதர்லாந்தின் ராணி மாக்சிமா இன்று சந்தித்து பேசினார். இது குறித்து குடியரசு தலைவர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், நெதர்லாந்தின் ராணி மாக்சிமா, குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை இன்று ஜனாதிபதி மாளிகையில் சந்தித்தார். 

ராணி மாக்சிமாவை வரவேற்ற குடியரசு தலைவர், இந்தியா மற்றும் நெதர்லாந்து இடையேயான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தார். இந்த சந்திப்பின் போது, முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரலில் நெதர்லாந்திற்கு மேற்கொண்ட அரசுமுறைப் பயணம் அன்புடன் நினைவுகூறப்பட்டது. 

கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற, இந்தியா-நெதர்லாந்து மெய்நிகர் உச்சிமாநாட்டின் போது தொடங்கப்பட்ட 'தண்ணீர் மீதான மூலோபாய கூட்டாண்மை' மூலம் இருதரப்பு உறவுகளும் சில ஆண்டுகளாக பல்வேறு பரிமாணங்களில் வலுவடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

President Draupati murmu meet netharland queen maxima


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->