வெள்ளதால் உயிரிழந்த பெண்ணின் குழந்தைகளுக்கான படிப்பு செலவு அரசு ஏற்கும் - தமிழிசை சவுந்தரராஜன்.! - Seithipunal
Seithipunal


மழை வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டு பலியான பெண்ணின் குழந்தைகளுக்கான படிப்பு செலவை பாண்டிச்சேரி அரசு ஏற்கும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் உள்ள மேட்டுப்பாளையம் பகுதி சண்முகபுரம் வடக்கு தெருவை சேர்ந்த சசிகுமார் என்பவரின் மனைவி ரசியா பேகம் என்பவர் மழை நீர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார். மீன் மார்க்கெட்டில் மீன் வாங்குவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்ற நிலையில், வல்லவாரி ஓடையில் இருந்து வந்த நீரினால் அவர் அடித்து செல்லப்பட்டார்.

இவரது உடல் நீண்ட நேர தேடலுக்கு பின்னர் மீட்கப்பட்ட நிலையில், மீன்வாங்க சென்ற தாய் வெள்ளத்தில் பலியான செய்தியை அறிந்து அவரது குழந்தைகள் கதறியழுதனர். மேலும், கணவர் சசிகுமார் மனைவியின் இறப்பை ஏற்றுக்கொள்ள முடியாத சோகத்திற்கு சென்றார். இதனால் அப்பகுதியில் மக்கள் பெரும் சோகத்திற்கு உள்ளாகினர்.

இந்நிலையில், " மழை வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டு பலியான பெண்ணின் பிள்ளைகளுடைய படிப்புச் செலவை அரசே ஏற்கும் என்றும், அவரது குடும்பத்தினருக்கு ரூபாய் 4 இலட்சம் நிதிஉதவி வழங்கப்படும் " என்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pondicherry Lit Governor Announce Relief Fund to Pondicherry Flood Woman Death Family


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->