சவால் விட்ட பாஜக எம்.பி.! நிரூபித்துக் காட்டிய நீர் வாரிய இயக்குனர்.! - Seithipunal
Seithipunal


வடமாநிலங்களில் தீபாவளி பண்டிகையை அடுத்து கொண்டாடப்படும் மிக பிரம்மாண்டமான விழா என்றால் அது சத் பூஜை.  ந்த பூஜையில் ஏராளமான மக்கள் ஒவ்வொரு வருடமும் கலந்து கொள்வது வழக்கம். அங்குள்ள ஆற்றங்கரைகளில் மக்கள் அனைவரும் ஒன்று கூடி இந்த பூஜையில் ஈடுபடுவார்கள். 

இந்நிலையில், பா.ஜ.க. எம்.பி. பர்வேஷ் வர்மா தெரிவித்ததாவது, "யமுனை ஆற்று நீரானது விஷம் நிறைந்து, நஞ்சு கலந்துள்ளது. அந்த நீரில் குளிக்க முடியுமா? என்று பா.ஜ.க. எம்.பி. பர்வேஷ் டெல்லி நீர் வாரிய இயக்குனர் சஞ்சய் சர்மாவிடம் சவால் விட்டார். 

இதையடுத்து அங்கு கொண்டாடப்படும், சத் பூஜையை முன்னிட்டு ஆற்று நீரில் நுரையை போக்குவதற்காக ஒரு வகையான ரசாயனம் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பாஜக எம்.பி. பர்வேஷ் குற்றச்சாட்டு தெரிவித்த நிலையில், அந்தக் குற்றச்சாட்டுக்கு எதிராக டெல்லி நீர் வாரிய இயக்குனர் சஞ்சய் சர்மா போலீசில் புகார் அளித்துள்ளார். 

இதைத்தொடர்ந்து, அவர், யமுனை ஆற்று தண்ணீரில் விஷம் கலக்கவில்லை என்பதை நிரூபிப்பதற்காக, நுரையை நீக்கும் ரசாயனங்களை ஆற்று நீரில் கலந்து, பின்பு அதனை தலையில் ஊற்றி குளித்து காண்பித்துள்ளார். இதையடுத்து பேசிய அவர் தெரிவித்துள்ளதாவது, 

"இதை பர்வேஷ் வர்மாஜிக்காக நன் செய்யவில்லை. அவர் நமது கவுரவத்திற்குரிய ஒரு எம்.பி. இது டெல்லி மக்களுக்கானது. தவறான கருத்துகள் எல்லா இடங்களிலும் பரப்பப்பட்டு வருகின்றதனால், இந்த ரசாயனம் விஷமில்லை என்பதை நிரூபிக்கவே இவ்வாறு செய்தேன். 

கியமுனை ஆற்றுநீரில் குளித்த பின்னர் நான் நன்றாக உள்ளேன். எனது உடலுக்கும், தோலுக்கும் எந்தவொரு பாதிப்பும் இல்லை. இது உணவு பதப்படுத்துதல் மற்றும் ஒப்பனை பொருட்களின் பயன்படுத்தப்படும் ஒருவிதமான ரசாயனம். இது விஷமற்றது. பாலிஆக்சிபுரொப்பைலீன் வகையை சேர்ந்த ரசாயனம் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், யமுனை ஆற்று தண்ணீரானது தூய்மையாகவும், பாதுகாப்புடனும் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

poison added in yamuna river bjp mp speech


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->