இறுதிக்கட்ட வாக்குப்பதிவு... ஒடிசாவில் பிரதமர் மோடி தீவிர பிரசாரம்.! - Seithipunal
Seithipunal


 பிரதமர் நரேந்திர மோடி, ஒடிசாவில் இன்று பிற்பகல் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேச உள்ளார். மக்களவை தேர்தலின் இறுதி கட்ட வாக்குப்பதிவு வருகின்ற ஜூன் 1ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் நேற்று ஜார்கண்ட், மேற்கு வங்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து இன்று காலை 11 மணி அளவில் மதுராபூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். 

பின்னர் பிற்பகல் 1 மணி அளவில் ஒடிசாவிலும் பிற்பகல் 2:30 மணி அளவில் பாலசேரிலும், மாலை 4.30 மணி அளவில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார். 

இதற்கிடையே உள்துறை அமைச்சர் உத்தர பிரதேசம் மாநிலத்தில் காலை 11:30 மணி அளவில் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். 

அதேபோல் மதியம் 1:15 மணியளவில் தியோரியாவிலும், பிற்பகல் 2:30 மணி அளவில் பல்லியாவிலும், மாலை 6 மணி அளவில் காஜாப்பூரில் நடைபெற உள்ள பேரணியில் கலந்து கொள்ள உள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi campaign in Odisha


கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?Advertisement

கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?
Seithipunal
--> -->