பதஞ்சலி யோகா கூட்டத்தில் ஆபாச படம்.. பொதுமக்கள் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


பதஞ்சலி யோகா ஆன்லைன் ஆலோசனை கூட்டத்தில் ஆபாச படம் அனுப்பியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் மாவட்டத்தில் உள்ள பஹத்ராபாத் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பதஞ்சலி சுகாதார ஆய்வு மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் இருந்து ஆன்லைன் வழியாக யோகா பயிற்சிகள் மற்றும் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்காக ஜூம் ஆப் மூலம் ஆன்லைன் வகுப்பு நடைபெற்று வந்துள்ளது. இந்த கூட்டத்தில் பதஞ்சலி யோகபீட அமைப்பில் உள்ளவர்களும், இந்திய மற்றும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என ஆண், பெண் அனைவரும் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில் இதில் கலந்து கொண்ட மஹாராஷ்டிரா மாநிலம் புனே நகரை சேர்ந்த இளைஞர் ஒருவர் திடீரென ஆபாச படம் ஒன்றை ஆன்லைன் வகுப்பு நடுவே ஒளிபரப்பி விட்டுள்ளார். இதனால், யோகா பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட பெண்கள் உள்பட பலரும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

இதனையடுத்து பஹத்ராபாத் காவல் நிலையத்தில், பதஞ்சலி அமைப்பை சேர்ந்த கமல் பதோரியா மற்றும் சிவம் வாலியா ஆகியோர் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில்  ஆகாஷ் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர் புனே நகரின் எரவாடா பகுதியில் பி.காம் கல்லூரி வளாகம் அருகே வசித்து வரும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pathanjali yoga meeting online class play porn video


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->