அடுத்த 2 நாள்! மிகக் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை!  - Seithipunal
Seithipunal


மேற்கு வங்கம் உள்ளிட்ட வட மாநிலங்களில் அடுத்த 2 நாள்களுக்கு மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அருணாச்சல பிரதேசம், அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் இன்று வரை மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை வெளியிட்ட நிலையில், மேலும் 2 நாள்களுக்கு தற்போது எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 

"மேற்கு வங்கம், இமயமலை மற்றும் சிக்கிம் ஆகிய மூன்று பகுதிகளில் 2 நாள்களுக்கு கன முதல் மிகக் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

சுமார் 115.6 மி.மீ முதல் 204.4 மி.மீ வரை இந்த கனமழை பெய்யு வாய்ப்புள்ளது. எனவே, இந்த மச்சைக்கு பொதுமக்கள் தயாராக இருக்குமாறு எச்சரிக்கப்படுகிறது. 

வரும் 12, 15, 16 ஆகிய தேதிகளில் உத்தரகண்டில் கன முதல் மிகக் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. 115.6 முதல் 204.4 மி மீ வரை மழை பெய்யலாம்" என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

ஏற்கனவே கடந்த இரண்டு நாள்களாக உத்தரகண்ட் மாநிலத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து, கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாநிலத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுபட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Orange Alert For North State IMD Report Aug


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->