சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்; நாள் ஒன்றுக்கு 5000 பேர் மட்டும் 'ஸ்பாட் புக்கிங்' செய்ய அனுமதி..!
Only 5000 people per day are allowed to do spot booking at Sabarimala
கார்த்திகை மாதம் பிறந்த நிலையில், கேரளா சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தினமும், ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்கு செல்வதால் ஐயப்பன் கோயிலில் கட்டுக்கடங்காத கூட்டம் நிரம்பி வழிகிறது.
வருடா வருடம் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் அதனை கட்டுப்படுத்த சில நடவடிக்கைகளை தேவஸ்தானம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, நவம்பர் 24-ஆம் தேதி வரை நாள் ஒன்றுக்கு 5000 பேருக்கு மட்டுமே ஸ்பாட் புக்கிங் செய்ய அனுமதி தர முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக 20,000 பேர் வரை ஸ்பாட் புக்கிங்குக்கு அனுமதி தரப்பட்டு இருந்த நிலையில், கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்துக் கொண்டே செல்வதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடாந்திர மண்டல, மகரவிளக்கு உற்சவ காலத்தை முன்னிட்டு நடை திறக்கப்பட்ட 48 மணி நேரத்திற்குள் 02 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திரண்டனர். கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டே இருப்பதால், நெரிசலை கையாளும் வகையில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் சபரிமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
English Summary
Only 5000 people per day are allowed to do spot booking at Sabarimala