மனிதர்களை வேட்டையாடும் ஓநாய்களில் ஒன்று பிடிபட்டது! - Seithipunal
Seithipunal


உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் காட்டுப்பகுதியில் கடந்த 45 நாட்களுக்கும் மேலாக மனிதர்களை குறித்து வைத்து தாக்கும் ஓநாய்களால் மக்கள் தூக்கமின்றி பயத்தில் நாட்களை கழித்தனர். இந்த ஓநாய் வேட்டையில்  இதுவரை 8 சிறுவர்கள் உள்பட 10 பேர் பலியாகி உள்ளனர்.

இதையடுத்து ஓநாயை பிடிக்க தேடுதல் வேட்டையில் அதிகாரிகள் இறங்கி, கிராம பகுதிகளில் ட்ரோன் மூலம் ஓநாய்கள் நடமாட்டத்தை கண்காணித்த நிலையில் 4 ஓநாய்கள் பிடிபட்டுள்ளன. இந்நிலையில் வனத்துறையினர் தற்போது 5வது ஓநாய் ஒன்றை பிடித்துள்ளனர். இந்த ஓநாயை பிடிக்க வனத்துறையினர் பல்வேறு முயற்சிகளில்  ஈடுபட்டனர். இது குறித்து தலைமை வனப்பாதுகாவலர் ரேணு சிங் கூறியது;

இதற்கு முன்பு தேடுதல் வேட்டையில் 4 ஓநாய்கள் பிடிபட்டன.  தற்போது 5வது ஓநாய் பிடிபட்டுள்ளது. இது மிகப்பெரிய வெற்றி.  வனத்துறையினர் மிக சிறப்பாக செயல்பட்டு பிடித்துள்ளனர் . 5வது ஓநாயை பிடிக்க மேற்கொண்ட முயற்சி மிகவும் சுவாரசியங்கள் நிறைந்தது.

நதுவாபூரில் உள்ள ஆட்டை இந்த ஓநாய் வேட்டையாடியுள்ளது. இதையறிந்து வலைகளை தயாராக வைத்து பதுங்கி காத்திருந்தோம். எதிர்பார்த்தபடியே ஓநாய் வலையில் மாட்டிக்கொண்டது. இதற்கு முன்பு ஓநாய்கள் மிகவும் சமயோசிதமாக தப்பித்துக் கொண்டன. ட்ரோன் கேமராக்கள் மூலம் தேடுவதை உணர்ந்து கொண்ட அவை, லாவகமாக ஓடி தப்பித்து விட்டன.

இம்முறை ஓநாய் ஆட்டை வேட்டையாடி கொண்டு ஓடியபோது வேறு திட்டத்தை செயல்படுத்தினோம். ட்ரோனை இயக்குவதை நிறுத்தி, அவை செல்லும் பாதைகளை கண்டறிந்து அங்கெல்லாம் வலைகளை அமைத்தோம். இரவை தவிர்த்து காலையில் வேட்டையை ஆரம்பித்தோம். அதன் பலனாக ஓநாய் வசமாக மாட்டியது.

பிடிபட்ட ஓநாய் மிருகக்காட்சி சாலைக்கு கொண்டு செல்லப்படும். இன்னும் ஒரு ஓநாய் மட்டும் இருக்கிறது. கூடிய விரைவில் அதையும் பிடித்துவிடுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

One of the werewolves that hunts humans has been caught


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->