பிச்சை எடுத்து ரூ.1 லட்சத்தை ஜெகன்நாதர் கோயிலுக்கு நன்கொடை வழங்கிய மூதாட்டி..!! - Seithipunal
Seithipunal


ஒடிசா மாநிலத்தை அடுத்த கந்தமால் மாவட்டத்தில் உள்ள குல்பானியைச் சேர்ந்தவர் துலா போரா. இவருடைய கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் யாருடைய ஆதரவும் இல்லாமல் அருகில் உள்ள கோயிலில் பிச்சை எடுத்து கிடைக்கும் பணத்தில் சாப்பிட்டு வருகிறார். செலவுக்கு போக மீதி இருக்கும் பணத்தை அங்குள்ள வங்கி ஒன்றில் சேமித்து வருகிறார்.

இந்த நிலையில் அவருடைய வங்கி கணக்கில் ரூ.1 ஒரு லட்சத்திற்கு மேல் பணம் சேர்ந்து விட்டதை வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்த பணம் முழுவதையும் பிரசித்தி பெற்ற ஜெகநாதன் நாதர் கோயிலுக்கு நன்கொடையாக வழங்க விரும்பினார். ஆனால் பிச்சை எடுத்த பணத்தை நன்கொடையாக பெற கோயில் நிர்வாகிகள் மறுத்துவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து கோயில் நிர்வாகிகளிடம் பேசிய துலா போரா "நான் சுவாமி ஜெகன்நாதரின் தீவிர பக்தை, வாழ்வின் கடைசி நாட்களில் உள்ளேன். எனக்கென யாரும் கிடையாது, எந்த ஆசையும் கிடையாது. கோயில் வாசலில் பிச்சை எடுத்து சேமித்த பணத்தை ஜெகன்நாதர் கோயிலின் புனரமைப்பு பணிக்காக தர விரும்புகிறேன்" என விளக்கம் அளித்தார். 

துலா போராவின் ஆன்மீக ஆர்வத்தை உணர்ந்த கோயில் நிர்வாகிகள் அவரது நன்கொடையை ஏற்றுக் கொண்டனர். யாரும் இன்றி தள்ளாடும் வயதிலும் ஆன்மிக நாட்டம் கொண்டு கோயிலுக்கு நன்கொடை அளித்த துலா போராவை ஒடிசா மக்கள் பாராட்டி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Old lady begged and donated Rs1 lakh to Jagannath temple


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->