BREAKING | என்டிஆர் மகள் தூக்கிட்டு செய்த நிலையில் சடலமாக மீட்பு.!  - Seithipunal
Seithipunal


தெலுங்கு தேசம் கட்சி நிறுவனரும், ஒருங்கிணைந்த ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சருமான என்.டி.ராமா ராவின் மகள் உமா மகேஷ்வரி, ஹைதராபாத்தில் உள்ள வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், பழம்பெரும் நடிகருமான எம்டி ராமராஜன் மகள் உமா மகேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சமத்துவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உமாமகேஸ்வரி (வயது 52) ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள அவரது வீட்டில் பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டார். 

இவரின் தற்கொலை குறித்து வெளியான முதல்கட்ட தகவலின்படி, சில காலமாக உமாமகேஸ்வரி உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக குடும்ப உறுப்பினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உமாமகேஸ்வரி தற்கொலை தான் செய்துகொண்டாரா எனபதை போலீசார் உறுதிப்படுத்தவில்லை. மேலும், அவரின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

என்.டி.ராமராவ்-க்கு 12 குழந்தைகள் (எட்டு மகன்கள் மற்றும் நான்கு மகள்கள்) இருந்தனர். உயிரிழந்த உமாமகேஸ்வரி நான்காவது மகள் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NTR Daughter mystery dead


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->