பயன்பாட்டில் இல்லாத ஆணையம்..? பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு..! 
                                    
                                    
                                   Non functional Information Commission
 
                                 
                               
                                
                                      
                                            மத்திய தகவல் ஆணையர் மற்றும் பிற மாநில தகவல் ஆணையர் பதவியிடங்கள் பல மாதமாக நிரப்பப்படவில்லை என உச்சநீதிமன்றத்தில் முறையீடப்பட்டிருந்தது.
இந்த முறையீடு தொடர்பான விசாரணை இன்று இடம்பெற்றது. குறித்த  விசாரணையில், "மத்திய தகவல் ஆணையத்தில் 10 ஆணையர்கள் இருக்க வேண்டிய நிலையில் இருவர் மட்டுமே பணியில்இருக்கின்றனர்
 

செயல்படாமல் உள்ள தகவல் ஆணையத்தால் என்ன பயன்?. காலியாக உள்ள தகவல் ஆணையர் பதவிகள் எப்போது நிரப்பப்படும்?. எப்போது ஆணையர்கள் நியமிக்கப்படுவார்கள்?" என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
அத்துடன், இது தொடர்பாக பிரமாணப் பத்திரம் உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
                                     
                                 
                   
                       English Summary
                       Non functional Information Commission