மார்க்கெட்டில் வாங்க யாருமில்லை… ஜம்மனை ஓடையில் குவியும் டன் கணக்கான தக்காளி...!
No one to buy them market Tons tomatoes piling up Jammanai stream
சைவம், அசைவம் என எந்த உணவுப் பட்டியலையும் தக்காளி இல்லாமல் கற்பனை செய்வது கடினம். சமையலறையின் இதயத் துடிப்பாக இருக்கும் இந்த சிவப்பு பொக்கிஷத்திற்கான தேவை ஆண்டுதோறும் குறையாததே. அதனால் தான் விவசாயிகள் பெரும் நம்பிக்கையுடன் தக்காளி சாகுபடியில் அதிக ஈடுபாடு காட்டி வருகின்றனர்.
ஆனால் இயற்கையும் சந்தையும் சேர்ந்து விளையாடும் விலை விளையாட்டு, அவர்களின் உழைப்பை பலமுறை சோதனைக்குட்படுத்துகிறது.ஒரு காலத்தில் கிலோ ரூ.100 வரை ஏறிய தக்காளி, பொன்னுக்கு நிகராக மதிக்கப்பட்டது.

அதே தக்காளி இன்று விலை சரிவால் கண்ணீராக மாறியுள்ளது. அதிக விளைச்சலும், சந்தையில் அதிக வரத்தும் காரணமாக விலை தாறுமாறாக வீழ்ந்து, விவசாயிகளின் கனவுகளை நொறுக்கி வருகிறது.திருப்பூரில் இந்த நிலை மேலும் கவலைக்குரியதாகியுள்ளது.
தென்னம்பாளையம் மார்க்கெட் மற்றும் உழவர் சந்தைகளுக்கு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து டன் கணக்கில் தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. கடந்த மாதம் கிலோ ரூ.50 வரை விற்ற தக்காளி, தற்போது 5 முதல் 10 கிலோ வரை வெறும் ரூ.100-க்கு விற்கப்படும் அளவுக்கு சரிந்துவிட்டது.
வாங்குபவர்கள் இல்லாமல் தேங்கிக் கிடக்கும் தக்காளிகள், குவியலாக அழுகி வீணாகின்றன.விற்பனை ஆகாததால், வியாபாரிகள் வேதனையுடன் கூடை கூடைையாக தக்காளிகளை அருகிலுள்ள கால்வாய்களில் கொட்டும் காட்சி, உழைப்பின் மதிப்பு மண்ணில் கலந்ததுபோல் தோன்றுகிறது.
“இன்னும் விலை குறைய வாய்ப்பு இருக்கிறது” என்ற தகவல், விவசாயிகளின் மனதில் மேலும் பதற்றத்தை விதைத்துள்ளது. உழைத்த கைகளுக்கு லாபம் பதிலாக இழப்பு மட்டுமே கிடைப்பது, விவசாய உலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
English Summary
No one to buy them market Tons tomatoes piling up Jammanai stream