பட்டாசும் வெடிக்கும் நேரத்தில் மாற்றமில்லை - உச்சநீதிமன்றம் அதிரடி.!! - Seithipunal
Seithipunal


பட்டாசும் வெடிக்கும் நேரத்தில் மாற்றமில்லை - உச்சநீதிமன்றம் அதிரடி.!!

நாட்டில் பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கக் கோரி அர்ஜூன் கோபால் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பட்டாசு தயாரிப்பு நிறுவனங்கள் சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. 

இதையடுத்து, பட்டாசு தொழிலாளர்களின் குடும்ப நலன் கருதி பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கக் கூடாது என்றும் பட்டாசு வெடிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க கோரியும் தமிழ்நாடு அரசு சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனுக்கள் கடந்த 15 ஆம் தேதி நீதிபதிகள் போண்ணா,சுந்தரேஷ் உள்ளிட்டோர் முன்பு விசாரணைக்கு வந்தன.  பட்டாசு தொடர்பான அனைத்து மனுக்களையும் ஒன்றிணைத்துள்ள உச்சநீதிமன்றம், விசாரணையை முடித்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது. 

இந்த நிலையில் பட்டாசு மனுக்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவில், "சுற்றுச்சூழலை பாதிக்காத பட்டாசுகளை வெடிக்கலாம். தீபாவளி அன்று நாடு முழுவதும் பட்டாசு வெடிக்கும் நேரத்தில் மாற்றம் இல்லை. ஏற்கெனவே உள்ள காலை 6 முதல் 7 மணி வரையும் மாலை 7 மணி முதல் 8 வரையும் பட்டாசு வெடிக்கலாம். டெல்லியில் பட்டாசுக்கான தடை தொடரும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

no change in using time of fire crackers supreme court order


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->