வெளியுலக காரணங்களால் பணவீக்கம் அதிகரிக்கிறது - நிர்மலா சீதாராமன்.! - Seithipunal
Seithipunal


மத்திய அரசு நடப்பாண்டில் ரூ. மூன்று லட்சத்து 25 ஆயிரம் கோடி கூடுதல் செலவிற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்று துணை மானிய கோரிக்கையை தாக்கல் செய்துள்ளது. அந்த கோரிக்கைக்கு மக்களவை ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது. 

இந்நிலையில், நேற்று மாநிலங்களவையில் துணை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:- "எரிபொருள் விலை மற்றும் உரம் விலை போன்ற வெளியுலக காரணங்களால், நாட்டில் பணவீக்கம் அதிகரிக்கிறது. 

இருந்தாலும், மொத்தவிலை பணவீக்கம் கடந்த இருபத்தொரு மாதங்களில் இல்லாத அளவுக்கு சற்று குறைந்துள்ளது. அதேபோல், ஆறு சதவீதத்திற்கு மேல் இருந்த சில்லரை விலை பணவீக்கம், கடந்த நவம்பர் மாதத்தில் 5.88 சதவீதமாக குறைந்துள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி கொண்டு தான் வருகிறது. 

நாட்டில் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை உள்ளிட்ட கொள்கைகளால், தனியார் மூலதனங்களின் செலவு அதிகரிக்கிறது. எனினும், வரிவசூலில் ஏற்பட்ட முன்னேற்றத்தால், துணை மானிய கோரிக்கையில் கேட்கப்பட்ட தொகையை திரட்ட முடியும். 

ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவாக வங்கிகளின் மொத்த வாராக்கடன்கள் 5.9 சதவீதமாக குறைந்துள்ளது. கொரோனா தொற்றை எதிர்கொண்ட மத்திய அரசின் அணுகுமுறையால், பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nirmala seetharaman speach in rajyasaba for money inflation


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->