இன்று முதல் 9 வந்தே பாரத் ரெயில் சேவை தொடக்கம் - எந்தெந்த மாநிலங்களில் தெரியுமா? - Seithipunal
Seithipunal


இன்று முதல் 9 வந்தே பாரத் ரெயில் சேவை தொடக்கம் - எந்தெந்த மாநிலங்களில் தெரியுமா?

இந்தியாவில் தயார்செய்யப்பட்ட அதிவேகத்தில் செல்லக்கூடிய மற்றும் உலகத்தரம் வாய்ந்த வந்தே பாரத் ரெயில்கள் நாடு முழுவதும் 25 வழித்தடங்களில் இயங்கி வருகிறது. இந்த நிலையில் மேலும் 9 புதிய ரெயில்கள் இன்று முதல் இயங்க உள்ளன. 

இந்த ரெயில்கள் தமிழகம் உள்பட மொத்தம் 11 மாநிலங்கள் பயன்பெறும் வகையில் இயக்கப்படும். இந்த ரெயில்களின் சேவையை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். 

இந்தப் புதிய ரெயில்கள் நெல்லை-சென்னை வழித்தடம், உதய்பூர்-ஜெய்ப்பூர், ஐதராபாத்-பெங்களூரு, விஜயவாடா-சென்னை, பாட்னா-ஹவுரா, காசர்கோடு-திருவனந்தபுரம், ரூர்கேலா-புவனேஸ்வர்-பூரி, ராஞ்சி-ஹவுரா, ஜாம்நகர்-ஆமதாபாத் உள்ளிட்ட வழித்தடங்களில் புதிய ரெயில்கள் இயங்க உள்ளன. 

மேலே குறிப்பிட்டுள்ள வழித்தடங்களில் தற்போதுள்ள அதிவேக ரெயில்களுடன் ஒப்பிடும்போது ரூர்கேலா-புவனேஸ்வர்-பூரி ரெயில் மற்றும் காசர்கோடு-திருவனந்தபுரம் ரெயில் ஆகியவை சுமார் 3 மணி நேரம் வேகமாக இருக்கும். 

ஐதராபாத்-பெங்களூரு செல்லும் ரெயில் இரண்டரை மணி நேரமும், நெல்லை-மதுரை-சென்னை செல்லும் ரெயில் சுமார் இரண்டு மணி நேரமும், ராஞ்சி-ஹவுரா ரெயில், பாட்னா-ஹவுரா ரெயில் மற்றும் ஜாம்நகர்-ஆமதாபாத் ரெயில் ஆகியவை சுமார் ஒரு மணி நேரமும், உதய்ப்பூர் - ஜெய்ப்பூர் ரெயில் சுமார் அரைமணி நேரமும் மற்ற எக்ஸ்பிரஸ் ரெயில்களைவிட வேகம் கொண்டதாக இருக்கும். 

இந்த ரெயில் சேவைகள் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருப்பதி ஏழுமலையான் கோவில், பூரி ஜெகந்நாதர் உள்ளிட்ட கோவில்களை இணைக்கும் வண்ணம் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nine vande bharat train service start 11 districts in india


கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?Advertisement

கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?
Seithipunal
--> -->