பள்ளி, கல்லூரி இயக்கம் குறித்து அதிரடி உத்தரவை பிறப்பித்த மத்திய அரசு! தயாரான மாநில அரசுகள்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், பல தளர்வுகளும், கட்டுப்பாடுகளும் மக்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், மத்திய அரசு அனைத்து மாநில தலைமை செயலர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. இது குறித்த கடிதத்தில், " பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி கடிதம் எழுதியுள்ளது. 

மேலும், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் கட்டாயம் மூடப்பட்டிருக்க வேண்டும் என்றும், இதனை அந்தந்த மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. 

பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஜூலை 31 வரை கட்டாயம் மூடப்பட்டு இருப்பதை அந்தந்த மாநில அரசு சார்பில் உறுதி செய்யப்பட வேண்டும். ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் தங்கள் வீடுகளிலிருந்து தான் பணிபுரிய வேண்டும் என்றும் கூறியுள்ளது. மத்திய அரசின் இந்த உத்தரவை உறுதி செய்ய மாநில அரசுகள் கல்வித்துறைக்கு பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New announcement about school and college opening


கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
Seithipunal