காங்கிரஸுக்கு பிரதமர் மோடி வாழ்த்து! - Seithipunal
Seithipunal


கர்நாடக சட்டமன்ற பொது தேர்தலின் வெற்றி முடிவுகள் வெளியாகியுள்ளது. தற்போது வரை 193 தொகுதிகளின் வெற்றி நிலவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, காங்கிரஸ் கட்சி 118 இடங்களிலும், பாரதிய ஜனதா கட்சி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மதசார்பற்ற ஜனதாதளம் 18 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.

மேலும் முன்னிலை நிலவரத்தை பொருத்தவரை காங்கிரஸ் கட்சி 18 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. பாஜக 11 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 2 இடங்களிலும் முன்னிலை பெற்று வருகின்றன.

ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை என்ற நிலையில், காங்கிரஸ் கட்சி 118 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால், கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி உறுதியாகி உள்ளது.

ஆளும் பாஜக தோல்வியை சந்தித்துள்ள நிலையில், இன்று மாலையே முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கர்நாடக காங்கிரஸ் வெற்றிக்கு தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். அதில், "கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துக்கள். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

கர்நாடக தேர்தலில் எங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பாஜக காரியகர்த்தாக்களின் கடின உழைப்பை நான் பாராட்டுகிறேன். இனி வரும் காலங்களில் கர்நாடகாவிற்கு இன்னும் பலத்துடன் சேவை செய்வோம்" என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Narendra Modi wish Karnataka congress


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->