காங்கிரஸ் ஆட்சியில் கிடைக்கல! பாஜக ஆட்சியில் முஸ்லிம்களுக்கு விருது கிடைக்கும் -  பத்மஸ்ரீ அகமது ரஷீத் உருக்கம்! - Seithipunal
Seithipunal


இந்திய அரசால் வழங்கப்பட்டு வரும் நாட்டின் நான்காவது உயரிய விருது பத்மா விருதுகள். கடந்த மார்ச் 22 ஆம் தேதி டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் 47 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

இதில், கர்நாடக மாநிலத்தின் பிட்ரிக் கைவினை கலைஞரான ரஷீத் அகமது காத்ரி க்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 

விழா நிறைவு பெற்ற பிறகு பிரதமர் நரேந்திர மோடி சிறிது நேரம் விருதாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது கர்நாடகாவின் கைவினைக் கலைஞர் அகமது ரஷீத் காத்ரி பிரதமர் மோடியின் கையை பிடித்து, "காங்கிரஸ் ஆட்சியின் போது எனக்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன் ஆனால் கிடைக்கவில்லை.

பாஜக கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் முஸ்லிம்களுக்கு எந்தவித முக்கியத்துவமும் கொடுக்கப்படாது. இனி நான் விருது வாங்க வாய்ப்பே கிடையாது என முடிவு செய்து கொண்டேன். 

இவற்றையெல்லாம் பாஜக அரசு சுத்தமாக மாற்றிவிட்டது" என அகமது ரஷீத் காத்திரி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Muslims will get award in BJP govt Padma Shri Ahmed Rashid


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->