முகத்தை காட்டினாலே பணம் அனுப்பலாம் - யுபிஐ பரிவர்த்தனைகள் புதிய வசதி.!!
money transfer by show face at upi
இந்தியாவில் சாலையோரை கடை முதல் மிகப்பெரிய மால்கள் வரை அனைத்திலுமே யு.பி.ஐ. பரிமாற்றம் முன்னிலை வகிக்கிறது. இந்த யு.பி.ஐ. பணம் பரிமாற்றத்திற்கு பின் நம்பர், ஓ.டி.பி. போன்ற முறைகள் வழியாக தான் பரிவர்த்தனைகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், யு.பி.ஐ பரிமாற்றத்தில் ஆதார் அடிப்படையிலான முக அடையாள சரிபார்ப்பு நடைமுறைக்கு வர உள்ளது.
இந்த முக அடையாள சரிபார்ப்பு முறை சோதனை அடிப்படையில் உடனடியாக நடைமுறைக்கு வர உள்ளது. அதனால் மக்கள் யு.பி.ஐ. வழியாக பணம் அனுப்பும்போது ரகசிய குறியீடு எண், அதாவது பின் நம்பர் தட்டச்சு செய்யாமல், முகத்தை கேமராவிற்கு முன்பு காட்டினால் போதும் பணம் தானாக பரிமாற்றம் செய்யப்பட்டு விடும். அதேபோல் ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கும்போது ஓ.டி.பி. அல்லது பின் நம்பர் தரவில்லை. நமது முகத்தை காட்டினாலே போதும். பணம் தானாக வெளியே வந்து விடும்.
இதுமட்டுமல்லாமல், கைரேகை முறையிலும் பணம் பரிமாற்றம் செய்யும் திட்டமும் அமல்படுத்தப்பட உள்ளது. ஆதார் முகஅடையாளம் வங்கி மற்றும் யு.பி.ஐ. பரிவர்த்தனைகளில் அறிமுகம் செய்யப்பட்டால், “முகத்தை காட்டினாலே பணம் பரிமாறும் காலம்” இந்தியாவில் தொடங்க இருக்கிறது.
English Summary
money transfer by show face at upi