"அயோத்தி" குறித்து மோடி சொன்ன வார்த்தை.!! ராணுவ வீரர்கள் நெகிழ்ச்சி.!! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகையை எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

கடந்த 2014 ஆண்டு முதல் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டு இமாச்சல் பிரதேச மாநிலம் லிப்சா பகுதியில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடியுள்ளார்.

சீனாவுக்கு மிக அருகில் அமைந்துள்ள லிப்சா பகுதியில் தீபாவளி பண்டிகையின் போது பணியில் இருக்கும் ராணுவ வீரர்களுடனும், இந்தோ-தீபத் எல்லை பாதுகாப்பு போலீசார்ருடனும் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.

ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய அவர் ஒவ்வொரு ஆண்டும் நான் பாதுகாப்பு படை வீரர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகிறேன். எங்கு ராமர் இருக்கிறாரோ அங்கு தான் அயோத்தி இருக்கும் என சொல்வார்கள். ஆனால் எனக்கு எங்கு பாதுகாப்பு படையினர் உள்ளார்களோ அங்கு தான் தீபாவளி பண்டிகை.

நான் 30 முதல் 35 ஆண்டுகளாக நீங்கள் இல்லாமல் தீபாவளி பண்டிகையை கொண்டாடியது கிடையாது. முதலமைச்சராக இருந்தது முதல் பிரதமரானது வரை ஏதோ ஒரு எல்லைக்கு சென்று அங்கு ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடுவேன் என பேசி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Modi said Ayodhya is where army soldiers are


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->