அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! - Seithipunal
Seithipunal


அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். 

இவருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்தது. இதனை தொடர்ந்து மருத்துவ காரணங்களால் சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தாக்கல் செய்தார். 

சென்னை உயர் நீதிமன்றத்திலும் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் மனு மீதான விசாரணை முடிவடைந்து மருத்துவ காரணங்களால் ஜாமின் வழங்க முடியாது என நீதிமன்றம் இன்று மனுவை தள்ளுபடி செய்துள்ளது. 

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்த போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. 

இதனால் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minster Senthil Balaji bail


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->