அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு: வழக்கை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம்! - Seithipunal
Seithipunalஅமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது நீதிபதி, செந்தில் பாலாஜிக்கு எடுக்கப்பட்ட எம் ஆர் ஐ அறிக்கை எங்கே என கேள்வி எழுப்பியுள்ளார். 

இதற்கு செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை விவரங்களை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இவருக்கு மூளை எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என வாதத்தை முன்வைத்தார். 

மேலும் உடல் நிலையை கருத்தில் கொண்டு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என அவர் தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது. 

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு அடுத்த வாரம் நவம்பர் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Senthil Balaji bail Supreme Court adjourned case


கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?Advertisement

கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?
Seithipunal
-->