பணமதிப்பிழப்பு விவகாரம் : உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு மத்திய நிதி அமைச்சர் வரவேற்பு.! - Seithipunal
Seithipunal


நேற்று உச்சநீதிமன்றம் மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று பரபரப்பு தீர்ப்பு அளித்தது. இதனை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவேற்றுள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது: "பணமதிப்பு நீக்கம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம். இது தொடர்பாக மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே ஆறு மாதங்களாக ஆலோசனைகள் நடைபெற்றன. 

அத்தகைய நடவடிகைகளைக் கொண்டுவருவதற்கு நியாயமான தேவை இருந்தது. மத்திய அரசிடமிருந்து முன்மொழியப்பட்டதால் மட்டுமே இந்த முடிவெடுக்கும் செயல்முறை தவறானது என்று கருத முடியாது. 

இதேபோல், பிரிவு 26 ஆர்பிஐ சட்டம் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று நீக்க முடியாது. பொருளாதாரக் கொள்கை விஷயங்களில் மிகுந்த கட்டுப்பாடு இருக்க வேண்டும். நீதிமன்றம் நிபுணத்துவத்துடன் இருக்கும் நிர்வாகத்தை அதன் ஞானத்துடன் மாற்ற முடியாது" என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister nirmala seetharaman welcome honable supremecourt judgement for demoneziation


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->