ஜம்முவில் துப்பாக்கிகளை இளைஞர்கள் எடுக்க காரணம் என்ன?..! மெஹபூபா முப்தி பரபரப்பு தகவல்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி வேலை இல்லாததன் காரணமாகவே இளைஞர்கள் துப்பாக்கியை எடுக்கிறார்கள் என்று பரபரப்பு தகவல் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " ஜம்முவில் 370 சிறப்பு அந்தஸ்தை நீக்கிய பின்னர், ஜம்மு காஷ்மீர் மக்களின் நிலம் மற்றும் வேலையை பிரிப்பதை பாஜக நோக்கமாக வைத்துள்ளது. காஷ்மீர் கலாச்சாரம் காணாமல் போகும் வகையில் 370 ஆவது பிரிவு இருந்தது. 

ஜம்மு காஷ்மீர் கொடி அல்லது நாட்டின் கொடி எங்களுக்கு அரசியல் அமைப்பால் வழங்கப்பட்டது. இதனை பாஜகவினர் எங்களிடம் இருந்து பறித்துக்கொண்டனர். இன்று பாஜகவின் நேரம் நன்றாக இருந்தால், நாளை அது நமக்கு சாதகமாகவும் மாறும். அவர்களின் நிலையும் ட்ரம்பை போலத்தான். 

எல்லைகள் திறக்கப்பட வேண்டும். ஜம்மு-காஷ்மீர் இந்திய பாகிஸ்தான் பிரச்சனைக்கு அமைதி பாலமாக இருக்க வேண்டும். தேர்தலில் போராட தயாராகிறோம். எதிரிகளை வீழ்த்த ஒன்று சேர வேண்டிய சூழல் வந்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mehbooba Mufti told about youngsters Terrorist Joining in Jammu Kashmir


கருத்துக் கணிப்பு

சசிகலா விடுதலைக்கு பின் அதிமுக - அமமுக..,Advertisement

கருத்துக் கணிப்பு

சசிகலா விடுதலைக்கு பின் அதிமுக - அமமுக..,
Seithipunal