நெருங்கும் மக்களவைத் தேர்தல் - நான்காம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட மாயாவதி.!  - Seithipunal
Seithipunal


இந்தியாவிலேயே அதிக மக்களவைத் தொகுதி உள்ள மாநிலம் என்றால் அது உத்தரப் பிரதேசம். இந்த மாநிலத்தில் மொத்தம் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. அதனால், இந்த மாநிலத்தில் ஏழு கட்டங்களிலும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் பிரதான அரசியல் கட்சியாக திகழும், முன்னாள் முதலமைச்சருமான மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடுகிறது. 

ஏற்கெனவே மூன்று கட்டமாக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று நான்காவது கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் மாயாவதி வெளியிட்டார் . இந்தப் பட்டியலில் மொத்தம் 9 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 

 

அதன்படி கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் பீம் ராஜ்பர் அசாம்கர் தொகுதியிலும், பாலகிருஷ்ணா சவுகான் கோசி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். இட்டா தொகுதியில் முகமது இர்பான், தவுராக்ரா தொகுதியில் ஷியாம் கிஷோர் அவஸ்தி, பைசாபாத்தில் சச்சிதானந்த் பாண்டே, பாஸ்தி தொகுதியில் தயாஷங்கர் மிஸ்ரா ஆகியோர் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 

கோரக்பூரில் ஜாவேத் சிம்னானி, சந்தவுலி தொகுதியில் சத்யேந்திர குமார் மவுரியா, ராபர்ட்ஸ்கஞ்ச் தொகுதியில் தனேஷ்வர் கவுதம் ஆகியோர் போட்டியிட உள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mayavathi announce fourth candidate list in parliment election


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->