மெட்ரோ ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை முயற்சி! கண்ணீர் மல்க ஆறுதல் கூறிய முதல்வர்! - Seithipunal
Seithipunal


பெங்களூரில் ஒரு சில இடங்களுக்கு மட்டுமே மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது. நேற்று காலையில் எலச்சனஹள்ளியில் இருந்து நாகவாராவுக்கு ஒரு மெட்ரோ ரெயில் புறப்பட்டது. காலை பசவனகுடி நேஷனல் கல்லூரி மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு, அந்த ரெயில் மெதுவாக வந்து கொண்டிருந்தது. அந்த ரெயிலில் ஏறுவதற்காக பயணிகள் காத்துகொண்டு இருந்தனர். அதுபோல, ஒரு வாலிபரும் ரெயிலில் ஏறுவதற்காக அங்கு நின்று கொண்டிருந்தார்.
 
இந்நிலையில், அந்த வாலிபர் திடீரென்று ஓடிப்போய் ரெயில் முன்பு பாய்ந்தார். இதை பார்த்து அங்கிருந்த பயணிகளும், மெட்ரோ ரெயில் நிலைய ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதே நேரத்தில் ரெயில் முன்பு வாலிபர் பாய்ந்ததை கவனித்த டிரைவர், உடனடியாக மெட்ரோ ரெயிலை நிறுத்தினார். அத்துடன் மெட்ரோ ரெயில் அதிகாரிகள் சுதாரித்து கொண்டு மெட்ரோ ரெயில் இயக்கத்திற்கு பயன்படும் மின் இணைப்பை துண்டித்தனர்.

அதன்பிறகு, மெட்ரோ ரெயிலை ஓட்டுநர் பின்னோக்கி எடுத்தார். அப்போது தண்டவாளத்திற்கு நடுவே தலையில் பலத்த காயங்களுடன் வாலிபர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனடியாக அந்த வாலிபரை மெட்ரோ ரெயில் நிலைய ஊழியர்கள் மீட்டனர். பின்னர் அவர், நிமான்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு வாலிபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உயிருக்கு எந்த விதமான ஆபத்தும் இல்லை என்று மருத்துவர்கள் கூறினார். 

இதுபற்றி அறிந்ததும் வி.வி.புரம் காவல் துறையினர் மற்றும் உயர் காவல் அதிகாரிகள், மெட்ரோ ரெயில் நிர்வாக அதிகாரிகள் பசவனகுடி நேஷனல் கல்லூரி மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

இந்நிலையில், தற்கொலைக்கு முயன்று நிமான்ஸ் மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வரும் வேணுகோபாலை நேற்று மாலையில் முதலமைச்சர் குமாரசாமி சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் வேணு கோபாலுக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி மருத்துவர்களுக்கு குமாரசாமி அறிவுறுத்தினார்.

அத்துடன் வேணுகோபால் தற்கொலைக்கு முயன்றதற்கான காரணம் குறித்து காவல் துறையிடம்  முதலமைச்சார் குமாரசாமி கேட்டு அறிந்து கொண்டார். மேலும் வேணுகோபாலின் பெற்றோருக்கு அவர் கண்ணீர் மல்க ஆறுதலும் கூறினார். பின்னர் நிமான்ஸ் மருத்துவமனையில் இருந்து முதலமைச்சார் குமாரசாமி புறப்பட்டு சென்றார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Man suicide attempt in metro train


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->