#வீடியோ: நடுவீதியில் தந்தையை தாக்கிய காவலர்கள்.. தந்தைக்காக காலில் விழுந்து மன்றாடிய 5 வயது மகன்..! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், முகக்கவசம் அணிதல் மற்றும் தனிமனித இடைவெளி போன்ற கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் அதிரடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க தவறும் பட்சத்தில், அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரில் செவ்வாய்க்கிழமை கொரோனா கட்டுப்பாடுகளை மீறும் நபர்களை கண்காணித்து, அவர்களின் மீது நடவடிக்கை எடுக்கும் செயலை இரண்டு காவல் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். இதன்போது, அப்பகுதியை சார்ந்த கிருஷ்ணா கெயர் என்ற 35 வயது ஓட்டுநர், தனது மகனுடன் ஆட்டோவில் சென்றுகொண்டு இருந்துள்ளார். மேலும், உடல்நலம் குன்றிய தந்தையை மருத்துவமனையில் சென்று காண கிருஷ்ணா சென்றுள்ளார். 

ஆட்டோவை காவல் அதிகாரிகள் இடைமறித்த நிலையில், கிருஷ்ணா அவசரத்தில் மாஸ்க்கை சரியாக அணியவில்லை. இதனைக்கண்ட காவல் அதிகாரிகள், மாஸ்க்கை சரியாக அணிய முடியாதா? என்று கேள்வி எழுப்பி, கிருஷ்ணாவை காவல் நிலையத்திற்கு அழைத்துள்ளனர். ஆனால், தந்தை மருத்துவமனையில் உள்ளதால், அவரை காண அவசரமாக செல்கிறேன் என்று கிருஷ்ணா கூறியுள்ளார். 

இதனால் காவல் அதிகாரிகளுக்கும் - கிருஷ்ணாவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்படவே, காவல் அதிகாரிகள் கிருஷ்ணாவை தாக்கியுள்ளனர். கிருஷ்ணாவின் மகன் கண்முன்னே காவல் அதிகாரிகள் கிருஷ்ணாவை தாக்கிய நிலையில், மகன் அழுதுகொண்டே தனது தந்தையை அடிக்க வேண்டாம் என்று கேட்டு, உதவிக்கு பிறரை அழைக்கிறார். இந்த விஷயம் தொடர்பாக வீடியோ காட்சிகள் வெளியாகவே, காவல் அதிகாரி கமல் ப்ராஜபத் மற்றும் தர்மேந்திரா ஜாட் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madhya Pradesh Indore Auto Driver Krishna Attack by 2 Cops Video Trending Social Media


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்
Seithipunal