டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு உதவிய லக்னோ டாக்டர் பர்வேஸ் அன்சாரி கைது..!
Lucknow doctor arrested for helping in Delhi Red Fort car blast incident
தலைநகர் டில்லியில் செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக காஷ்மீரை சேர்ந்த இரண்டு டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவியதாக லக்னோவை சேர்ந்த பெண் டாக்டர் ஷாகீன் ஷாகித் என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இவர் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், ஷாகீன் ஷாகித்தின் சகோதரர் பர்வேஸ் அன்சாரி (41) என்ற டாக்டரையும் உத்தரபிரதேச பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள், உ.பி., மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் உதவியுடன் கைது செய்துள்ளனர். தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தேவையானவற்றை ஏற்பாடு செய்து கொடுத்ததில் பர்வேஷ் அன்சாரிக்கு முக்கிய பங்கு உண்டு என அதிர்ச்சி தகவலை போலீசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பர்வேஸ் அன்சாரி, கடந்த 2011-இல் லக்னோவில் எம்பிபிஎஸ் முடித்துள்ளான். பின்னர், 2015-ஆம் ஆண்டு ஆக்ராவில் உள்ள மருத்துவக் கல்லூரியில் எம்டி முடித்ததோடு, 2021 வரை லக்னோவில் உள்ள தனியார் பல்கலைகழகத்தில் படித்தும் வந்துள்ளான்.
பரிதாபாத்தில் வெடிபொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் காஷ்மீர் டாக்டர் அதீல் கைது செய்யப்பட்ட நவம்பர் 06-ஆம் தேதிக்கு முதல் நாள் நவம்பர் 05 இவன் ராஜினாமா செய்துள்ளான். அதுதான், பர்வேஸ் அன்சாரி தனியாக வீடு ஒன்று வாங்கியுள்ளதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.

அதன்படி, அந்த வீட்டில் நேற்று முன்தினம் (நவம்பர் 11) முதல் 12 வரை பயங்கரவாத தடுப்புப்பிரிவு அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, மொபைல்போன்கள் மற்றும் சிம்கார்டுகள், மின்சார சாதனங்கள் மற்றும் லேப்டாப்கள், முக்கி ஆவணங்கள், கத்திகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
அத்துடன், அங்கு தூசி நிறைந்த பர்னீச்சர்கள் மற்றும் பயன்படுத்தப்படாத கார்கள் உள்ளிட்டவை இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். டில்லி செங்கோட்டையில் நடந்த குண்டுவெடிப்பில் இவருக்கு உள்ள பங்கு குறித்து பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவருடன் தொடர்பில் உள்ளவர்கள் குறித்தும் விசாரிக்கின்றனர்.
English Summary
Lucknow doctor arrested for helping in Delhi Red Fort car blast incident