கொடைக்கானல் சாலையில் வாக்கிங் சென்ற கரடி! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் : கொடைக்கானல் அருகே தொடர்ந்து சில நாட்களாக யானை, காட்டெருமை, காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகள் ஊருக்குள் நுழைந்து அட்டகாசம் செய்வது அதிகமாகவுள்ளது.  

இதேபோல், மலைப்பாதையில் வனவிலங்குகள் உலா வருவதும் அதிகரித்துவிட்டது. இந்நிலையில் நேற்று அதிகாலை திண்டுக்கல்லில் இருந்து தனியா பேருந்து ஒன்று சித்தரேவு,பெரும்பாறையை கடந்து தாண்டிக்குடி அருகே உள்ள பண்ணைக்காடு மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது. 

அப்போது,அந்த சாலையில் கரடி ஒன்று நடந்து கொண்டிருப்பதை பார்த்த பேருந்து ஓட்டுநர் பேருந்தை மெதுவாக ஓடினார். அதனை கண்ட பயணிகள் சிலர் கரடி நடந்து கொண்டிருப்பதை செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தனர். 

அந்த கரடி சுமார் 100 மீட்டர் தொலைவு சாலையில் நடந்து சென்று, அருகில் இருந்த தோட்டத்தில் நுழைந்தது. 
 
இதனால் அந்த மலைப்பாதையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

மலைப்பாதையில் உலா வந்த கரடியின் வீடியோ மற்றும் புகைப்படத்தை சிலர் சமூக வலைத்தளத்தில் பகிரந்தனர். அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kodaikkanal bear walking issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->