கேதார்நாத் கோவிலில் தங்கத்தகடுகள் - எதிர்ப்பு தெரிவிக்கும் அர்ச்சகர்கள்..! - Seithipunal
Seithipunal


உத்தராகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள கேதார்நாத்தில் மந்தாகினி ஆற்றங்கரைக்கு அருகில் கார்வால் சிவாலிக் மலைத் தொடரில் சிவன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவில் இந்தியாவின் 12 சோதிலிங்க சிவத் தலங்களில் ஒன்றாகும். இந்நிலையில், இந்தக் கோவிலின் கருவறையில் தற்போது 230 கிலோ எடையில் வெள்ளி தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. 

இந்த தகடுகளை பொருத்தி தருவதற்கு மும்பை வைர வியாபாரி வந்துள்ளார். இதுகுறித்து பத்ரிநாத் - கேதார்நாத் கோயில் கமிட்டி அதிகாரிகள் தெரிவித்ததாவது, "கேதார்நாத் கோயிலின் கருவறையில் கடந்த 2017-ம் ஆண்டு வெள்ளி தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இங்கு தங்க தகடுகள் பொருத்தி தர மும்பை வைர வியாபாரி ஒருவர் முன்வந்துள்ளார். அவர் தனது பெயரை பொதுவில் தெரிவிக்க விரும்பவில்லை. 

கேதார்நாத் கோயில் கருவறையில் தங்க தகடுகள் பொருத்த அவர் அரசிடம் அனுமதி கோரினார். இதற்கு கடந்த மாதம் ஒப்புதல் கிடைத்தது. தங்க தகடுகள் பொருத்துவதற்காக, வெள்ளித் தகடுகளை அகற்றும் பணியை தொடங்கிவிட்டோம். அதன்பின் கருவறைக்குள்ளும், தூண்களிலும் தாமிர தகடுகள் பொருத்தப்படும். அளவெடுக்கும் பணி முடிவடைந்ததும், தங்க தகடுகள் செய்யப்பட்டு பொருத்தப்படும். 

இதுமட்டுமல்லாமல் கருவறையின் சுவர்கள், மேற்கூரைகள் மற்றும் தூண்களில் தங்க தகடுகள் பொருத்தப்படவுள்ளன என்று கோயில் கமிட்டி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், கேதார்நாத் கோவிலின் கருவறைக்குள்ளும் தூண்களுக்கும் தங்கத் தகடுகள் பொருத்துவதற்கும் அர்ச்சகர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

இதுகுறித்து அர்ச்சகர் தரப்பில் தெரிவித்ததாவது, "பாண்டவர்கள் நினைத்திருந்தால் தங்கத்திலோ, வைரத்திலோ கருவறையை கட்டிருக்கலாம், ஆனால் இப்போது அவற்றை மாற்றுவது கோவில் அர்த்தத்தையே மாற்றுவதாகும்" என்று தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ketharnath sivan temple


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->