வரன் தேட இப்படியொரு நூதன டெக்னீக்.. ஆஸி., இத்தாலியில் இருந்து வரும் அழைப்புகள்..! - Seithipunal
Seithipunal


திருமண வரன்கள் தேடும் இணையத்திலும் தனக்கான பெண் கிடைக்காத காரணத்தால், கேரளாவை சார்ந்த இளைஞர் மேற்கொண்ட நூதன முறை இணையங்களில் வைரலாகி, உலகளவில் வரன்கள் வர தொடங்கியுள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் மாவட்டத்தை சார்ந்தவர் உன்னி கிருஷ்ணன் (வயது 33). இவர் தனக்கு திருமணம் செய்ய முடிவெடுத்து, தனக்கு தெரிந்த உற்றார்-உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்களின் தொடங்கி திருமண இணையம் வரை பலரிடம் வரன் கேட்டு பார்த்தும் வரன் கிடைக்கவில்லை. 

இதனையடுத்து, ஒரு கட்டத்தில் விரக்தியடைந்த உன்னி கிருஷ்ணன், பெண் தேடுவதில் இருந்து தளராமல் தனது திருமணத்திற்கான பெண் தேடலை சற்று மாற்றி சிந்தித்து இருக்கிறார். அவருக்கு உதித்த ஆலோசனையின் பேரில், தனது கடையிலேயே " மணமகள் தேவை " என தனது அலைபேசி எண்ணுடன் விளம்பரத்தை வைத்துள்ளார்.

மேலும், அதில், " மணமகள் தேவை, ஜாதி-மதம் தடையில்லை" என்று பதிவிட, இதனை அவரின் நண்பர் புகைப்படம் எடுத்து விளையாட்டுத்தனமாக இணையத்தில் பதிவு செய்துள்ளார். அந்த பதிவு பதிவிடப்பட்டதில் இருந்து தற்போது வரை அவருக்கு தொடர் அழைப்புகள் வருகிறது. 

“எந்த வாழ்க்கை துணையை எதிர்பார்த்து நான் காத்திருக்கும் காலம் நீண்டு கொண்டே இருக்கிறது. அதனால் அதற்கு தீர்வு காண எனக்கு ஒரு யோசனை வந்தது. அதன்படி எனது கடையில் ‘மணமகள் தேவை’ என பிளக்கார்ட் போல விளம்பரம் கொடுத்திருந்தேன். 

அந்த அழைப்புகள் இந்தியாவில் இருந்து மட்டுமல்லாது ஆஸ்திரேலியா, இத்தாலி போன்ற நாடுகளில் இருந்தும் பெறப்படுகிறது என தெரிவிக்கிறார். மேலும், தனது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றாற்போல வரன்கள் இன்னும் அமையவில்லை என்பதால், தற்போது வரை திருமண பந்தம் கைகூடவில்லை என்றும் உன்னி கிருஷ்ணன் வருத்தம் தெரிவிக்கிறார். 

பல திருமண அழைப்புகளை அவர் தட்டிக்கழித்துள்ளதால், அவரை போல திருமணத்திற்கு வரன் பார்க்கும் பலரும், அவர் வேண்டாம் என்று கூறிய பெண்களின் அலைபேசி எண்களை கேட்டு வருவதாகவும் தெரிவிக்கிறார். ஆனால், அவரோ பெண்களின் பாதுகாப்பு கருதி அதனை கொடுக்கவில்லை.

விரைவில் நல்ல வரன் கிடைத்து, உன்னி கிருஷ்ணன் திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்க வாழ்த்துக்கள்..!

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala Trissur Youngster Unni Krishnan Advertisement about Want Bride at Shop Now Trending Social Media


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->