கொரோனா பரவல் எதிரொலி: ஆற்றுக்கால் பகவதி அம்மன் அருள் பெற வீட்டிலேயே பொங்கல் வைத்து வழிபாடு.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தின் பிரசித்தி பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் வருடம்தோறும் மாசி மாதத்தில் பொங்கல் விழா நடைபெறும். இந்த வருடம் பொங்கல் விழா கடந்த 19 ஆம் தேதி தொடங்கியது. 

தொடர்ச்சியாக 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் பொங்கலிடும் விழா இன்று நடைபெற்றது. கோவில் முன்புறம் அமைக்கப்பட்டு இருந்த பண்டார அடுப்பில் காலை 10.50 மணிக்கு சூடம் ஏற்றி நெருப்பு மூட்டப்பட்டு பொங்கலிடுவதற்கு அறிவிப்பு வெளியானது. 

தற்போது, கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வராததால் கோவிலில் பக்தர்கள் பொங்கல் வைக்க அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் அவரவர் வீட்டு வாயிலில் பொங்கல் வைத்து அம்மனை வழிபட அறிவுறுத்தப்பட்டனர்.

இதனையடுத்து, இன்று காலை பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்ற நிலையில், இன்று மாலை 4 மணியளவில் பொங்கல் நெய்வேத்திய நிகழ்ச்சி நடைபெற்றது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala Sri Bhagavathi Amman Temple Pongal Celebration 27 Feb 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->