கொலைகார தேசமாகும் கேரளா., ஆர்எஸ்எஸ் பிரமுகர் வெட்டி படுகொலை.! பழிக்குப்பழி தொடரும் கொலைகள்.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம் பாலக்காடு அருகே எலப்பள்ளி பாறையை சேர்ந்த சுபைர் (43 வயது) என்பவர் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தொண்டராக இருந்து வருகிறார். முன்தினம் இவரும் இவரின் தந்தையும் அருகில் உள்ள பள்ளி வாசலுக்கு தொழுகைக்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். 

அப்போது கண் இமைக்கும் நேரத்தில் இவர்களின் இருசக்கர வாகனத்தை கார் ஒன்று மோதியது. அடுத்த நொடியே காரில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள், சுபைரை சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த படுகொலை சம்பவம் அரங்கேறிய 24 மணி நேரத்துக்குள்ளாகவே, நேற்று மதியம் ஒரு மணியளவில் பாலக்காடு நகரில் உள்ள மேலமூரியில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் சீனிவாசன் என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக, 6 மாதங்களுக்கு முன் ஆர்.எஸ்.எஸ். தொண்டர் ஒருவர் இதேபோல் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதற்க்கு பழிக்கு பழியாக சுபைர் கொல்லப்பட்டாரா? என்றும், சுபைர் படுகொலைக்கு பழிக்கு பழியாக சீனிவாசன் கொல்லப்பட்டாரா? என்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரளத்தில் கம்யூனிஸ்ட் - காங்கிரஸ், கம்யூனிஸ்ட் - பாஜக, ஆர்எஸ்எஸ் - எஸ்டிபிஐ இடையிலான அரசியல் படுகொலைகள் அரங்கேறிவருவது தொடர்கதையாகி வருகிறது.

'கருத்தை கருத்தால் வெல்ல வேண்டுமே தவிர, கத்தியால் அல்ல' என்பதே நாட்டு நலன் விரும்பிகளின் எண்ணமாக உள்ளது. 

"காந்தி பிறந்த தேசத்தில் கண்ணுக்கு கண்., பல்லுக்கு பல் என்று வாள் எடுக்கும் இந்த கொலை கலாச்சாரத்துக்கு யாரேனும் முற்றுப்புள்ளி வையுங்களேன்" என்று சமூக ஆர்வலர்களும் மனம் குமுறி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kerala sdpi and rss member murdered


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->