மர்மமான முறையில் இறந்து கிடந்த இரு போலீசார்.! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்.! - Seithipunal
Seithipunal


காட்டுப்பன்றியை பிடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி இரு போலீசார் மரணமடைந்த விவகாரத்தில், நிலத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், முட்டிகுலங்கர பகுதியில் கேரள மாநில போலீஸ் முகாம் அமைந்துள்ளது. இங்கு பணியில் இருந்த மோகன்தாஸ், அசோகன் ஆகிய இருவரும் கடந்த புதன்கிழமை முதல் காணவில்லை.

மறுநாள் வியாழக்கிழமை காலை அவர்களை போலீசார் தேடிய போது, வயல் வெளி ஒன்றில் இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர். அவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதற்கிடையே பிரேத பரிசோதனையில் இருவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த நிலத்தின் உரிமையாளர் சுரேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்திய விசாரணையில், அவருடைய விவசாய நிலத்திற்குள் காட்டுப்பன்றிகள் வருவதை பிடிப்பதற்காக மின்வேலி வைத்துள்ளார். சம்பவம் நடந்த அன்றைய தினம் சுரேஷ் வைத்திருந்த மின்வேலி பொறியில் போலீசார் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

இதனை அடுத்து என்ன செய்வது என்று தெரியாத சுரேஷ், இரு சடங்குகளையும் தனது நிலத்தில் இருந்து அப்புறப்படுத்திய சுரேஷ் மற்றொரு நிலத்தில் போட்டு விட்டு சென்றுள்ளார். மேலும் போலீசாரின் விசாரணையில் பலியாகிய இரு போலீசாரும்  இரவு நேரத்தில் மீன்பிடிக்க சென்றபோது இந்த விபரீதம் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kerala palakadu police death issue


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->