45 ஆண்டுகளுக்கு பின் உயிருடன் வந்த நபர்.! ஆனந்த கண்ணீர் வடித்த 91 வயது தாய்.! மும்பை டூ கேரளா.! - Seithipunal
Seithipunal


1976ஆம் ஆண்டு நடந்த விமான விபத்தில் பலியானதாக கருதப்பட்ட நபர் ஒருவர், 45 ஆண்டுகளுக்குப் பின்னர் வீடு திரும்பி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர் சஜ்ஜத் தங்கள், இவருக்கு 25 வயது இருக்கும் போது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக 1976 ஆம் ஆண்டு அபுதாபி சென்றார். நடிகை ராணி சந்திரா பங்கேற்ற அந்த கலை நிகழ்ச்சி குழுவில் இடம்பெற்று இருந்த 95 பேர் விமான விபத்தில் உயிரிழந்தனர்.

விபத்தில் சஜ்ஜத் தங்கல் இறந்துவிட்டதாக அவரின் குடும்பத்தார்கள் முடிவு செய்து விட்டனர். ஆனால் அவர் அன்றைய தினம் விமானத்தில் பயணம் செய்யவே இல்லை. ஒரு சில காரணங்களால் அவர் அந்த விமானத்தில் பயணம் செய்யமுடியாமல் போனது.

அதேசமயத்தில் தன்னுடைய குழு விமான விபத்தில் உயிர் இழந்ததை எண்ணி சோகத்தில் மூழ்கிய சஜ்ஜத் தங்கல் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டார். இதனால் சொந்த ஊருக்கு திரும்பாத சஜ்ஜத் தங்கல் மும்பை மாநகரில் கிடைக்கும் வேலைகளை செய்துவிட்டு அங்கேயே தங்கிவிட்டார்.

இந்த நிலையில், ஒரு தொண்டு நிறுவனம் 45 ஆண்டுகளுக்குப் பிறகு சஜ்ஜத் தங்கலை அவரின் குடும்பத்தோடு இணைத்துள்ளது. உயிருடன் வந்த தனது மகனை 91 வயது தாய் கண்ணீர் மல்க வரவேற்றார். உறவினர்கள், குடும்பத்தினர் அனைவரும் ஆனந்தக் கண்ணீரில் மூழ்கினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kerala man after 45 years joint his family


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->