கோவில் திருவிழா முன்விரோதத்தில் சிறுவன் கொடூர கொலை...! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா மாவட்டம் வள்ளிகொண்ணு பகுதியை சார்ந்தவர் அம்புலி குமார். இவரது மகன் அபிமஞ்சு (வயது 15). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். 

இந்நிலையில், இன்று அப்பகுதியில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் கலந்துகொள்ள அபிமஞ்சு கோவிலுக்கு சென்ற நிலையில், சாமி தரிசனம் செய்துவிட்டு நண்பர்களுடன் அப்பகுதியில் வளம் வந்துள்ளார். 

இதன்போது, அங்கு இருந்த மர்ம நபர்கள் சிலர் அபிமஞ்சவிடம் திடீரென வாக்குவாதம் செய்து, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர். கத்திகுத்து சம்பவத்தில் பாதிப்படைந்த அபிமஞ்சு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். 

இந்த விஷயம் தொடர்பாக ஆலப்புழா காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அபிமஞ்சுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

விசாரணையில், ஏற்கனவே மற்றொரு கோவிலில் நடந்த திருவிழாவின் பொது ஏற்பட்ட தகராறில் அபிமஞ்சுவை ஒரு கும்பல் தாக்கியதாகவும் தெரியவருகிறது. இதனால் அந்த கும்பலை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala Alappuzha Child Murder Police Investigation 15 April 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->