பெங்களூரில் இந்திரா உணவகம் மூடும் அபாயம்?.. ஏழை, எளிய மக்கள் கவலை.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் நகரில் ஏழை, எளிய மக்கள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் மலிவு விலைகளில் உணவுகளை வழங்க இந்திரா உணவகங்கள் தொடங்கப்பட்டது. இந்த உணவகத்தில் ரூ.5 க்கு காலை சிற்றுண்டி மற்றும் மதியம், இரவு உணவுகளுக்கு ரூ.10 வசூல் செய்யப்பட்டு உணவுகள் வழங்கப்பட்டு வந்தது. 

பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட 198 வார்டுகளிலும் இந்திரா உணவகங்கள் இயங்கி வரும் நிலையில், நடமாடும் இந்திரா உணவகமும் தொடங்கப்பட்டது. இந்த உணவகங்கள் கடந்த 2017 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி முதல், அன்றைய முதல்வர் சித்தராமையாவால் தொடங்கப்பட்டது. 

இந்திரா உணவகங்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ள பல்வேறு முக்கிய நகரிலும் தொடங்கப்பட்ட நிலையில், கடந்த 2018 ஆம் வருடத்தில் பெங்களூரில் நடமாடும் உணவகங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு மக்கள் பயன் பெற்றனர். உணவகத்திற்கான நிதியை மாநகராட்சி மற்றும் நகராட்சி மன்ற நிர்வாகங்கள் ஒதுக்கீடு செய்து வருகிறது. 

இந்நிலையில், பெங்களூர் மாநகராட்சி நிர்வாகம் கொரோனா பாதிப்பு நிதி நெருக்கடி காரணமாக சிக்கி தவித்துள்ளதால், கடந்த 10 மாதமாக இந்திரா உணவகத்திற்கு ஒதுக்க வேண்டிய ரூ.22 கோடியை பெங்களூர் மாநகராட்சி ஒதுக்காமல் இருந்து வந்துள்ளது. இதனால் இந்திரா உணவகம் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Bangalore Indira Canteen May be Closed due to Budget Problem


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->