மசாஜ்., பெண்கள் என்ற விளம்பரம் வருகிறதா?.. ஆசையாக கூட்டிச்சென்று அடியில் தீ..! இளைஞர்களே உஷார்..!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் காக்ஷ் டவுன் (Cox Town) பகுதியை சார்ந்தவர் கரண் (வயது 41). இவர் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தை மகிழ்ச்சியாக கொண்டாட நினைத்துள்ளார். ஆனால், அவருக்கு காதலி இல்லாததால், இணையத்தில் பார்த்த பாங்காக் மசாஜ் செய்யும் இடத்திற்கு செல்ல நினைத்துள்ளார். 

இவரின் திட்டப்படி, இணையத்தில் வந்த விளம்பரத்தை பார்த்து, அந்த விளம்பரத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள கவர்ச்சிகரமான வாசகத்தில் விழுந்து தொடர்பு கொண்டுள்ளார். மறுமுனையில் பேசிய பெண்மணி, 14 ஆம் தேதி அங்குள்ள கமனஹள்ளி பகுதிக்கு வரச்சொல்லி, ஒருவரை சந்திக்க கூறியுள்ளார்.

கரணும் மனதில் இன்ப வெள்ளத்தில் மூழ்கி 14 ஆம் தேதி சென்ற நிலையில், அங்கு வந்த நபர் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கரணை அழைத்து சென்றுள்ளார். பின்னர், ரூ.6 ஆயிரம் பணம் கொடுத்தால் பெண்கள் வருவார்கள் என்று கூறவே, அவரும் ரூ.6 ஆயிரம் பணம் கொடுத்துள்ளார். 

இதன்போது, அவரை மற்றொரு இடத்திற்கு அனுப்பி வைத்த நிலையில், அங்கு ஆட்டோவில் இருந்து இறங்கிய 3 பெண்கள் கரணிடம் மேலும் ரூ.5 ஆயிரம் பணம் கேட்டு மிரட்டிய நிலையில், பணம் கொடுக்கவில்லை என்றால் பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். இதனால் பதறிப்போன கரண் ரூ.5 ஆயிரம் பணத்தையும் கொடுத்துள்ளார். 

பணத்தை பெற்றுக்கொண்டதும் பெண்கள் அங்கிருந்து சிறகடித்து பறந்து சென்ற நிலையில், கரண் அங்கிருந்து புறப்பட்டு சென்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Bangalore Cox Town Youngster Cheated by Online Spa Massage Advertisement


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->