ஐடி ரெய்டு : பீரோ முழுக்க கட்டுக்கட்டாய் பணம், 150 கோடி ரூபாயை எண்ணியே சோர்வடைந்த அதிகாரிகள்.! வசமாக சிக்கிய புள்ளி.! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச மாநிலத்தில் தொழிலதிபர் வீட்டில் ரூ.150 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிரபல தொழிலதிபரான பியூஸ் ஜெயின்-க்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை இன்று 2ஆவது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில், இதுவரை ரூ.150 கோடி பறிமுதல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பியூஸ் ஜெயின்-க்கு சொந்தமான வீடு, அலுவலகம், தொழிற்சாலை, குளிர்பான கிடங்கு, பெட்ரோல் நிலையத்தில் நடத்தப்பட்ட இந்த சோதனையில், பான்மசாலா, வாசனை திரவியங்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதிலும் முறைகேடு நடந்துள்ளதை வருமானவரித்துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

இந்த சோதனையில் முக்கியமாக, இவரின் தொழிற்சாலையில் போலியான இன்வாய்ஸ்-கள் மூலம் சரக்குகளை அனுப்ப தயாராக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 


 
பியூஸ் ஜெயின் இல்லத்தில் கைப்பற்றப்பட்ட பணத்தை, பணம் எண்ணும் 4 இயந்திரங்கள் மூலம் வருமான வரித்துறை அதிகாரிகள் எண்ணி வருகின்றனர். (இன்னும் முடியவில்லை) இதுவரை 150 கோடி ரூபாய் ரொக்கம் எண்ணப்பட்டுள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

it raid in uttar pradesh


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->